சீன கப்பல் – ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சீன ஆய்வுக் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம் செய்வதில் தொடர்பில் இந்தியாவின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளை அங்கீகரித்து மதித்து செயற்படுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சீனக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் தெரிவித்துள்ளதாக திங்கட்கிழமை இலங்கை உறுதிப்படுத்தியது.

சீனக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுக்கையை உளவுக்கப்பல் வரைபடமாக்கும். இதனால் கப்பலை ஹம்பாந்தோட்டையில் நிறுத்துவது குறித்து இந்தியா தனது பாதுகாப்புக் கவலைகளை தெரிவித்திருந்தது.

இந்தியாவின் கவலைகள் குறித்து கருத்து தெரிவித்த இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இந்தியாவின் அண்டை நாடு மற்றும் அதன் கொள்கையினால் இலங்கை அதிக நன்மைகளை அடைந்துள்ளதால், இந்தியாவின் கவலைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எந்தவித எதிர்பார்ப்புகளோ அல்லது நிபந்தனைகளோ இன்றி இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், IMF விவாதங்களின் போது இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இது எங்களுக்கு மிகவும் தேவையான நம்பகத்தன்மையை அளித்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா கவலைப்படுவது நியாயமானது என்று தான் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles