கொழும்பு உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 887 குடும்பங்களைச் சேர்ந்த 3,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 3857 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மின் துண்டிப்பு
அதேவேளை, நேற்றிரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.