நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
இதனால் ஆயிரத்து 344 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநியால், 352 வீடுகள் பகுதியளவிலும் இரு வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் 79 குடும்பங்களைச் சேர்ந்த, 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
