சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்த்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபரிடமிருந்து இரகசிய வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் (04) அவரை மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் தனது சட்டத்தரணியூடாக முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபரான சமன் ரத்நாயக்க மஹர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, நேற்று (01) குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்த அவர் சுமார் 8 மணித்தியாலங்களாக வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டார்.










