சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை!

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று (05) முதல் விநியோகிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் வழங்கப்படும் கியூ ஆர் கோட்டா முறைமைபோன்று அல்லாமல், சுற்றுலா பயணிகள் தமக்கு தேவையானளவு எரிபொருளை ‘சிபேட்கோ’ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். ஐஓசி நிலையங்களிலும் இச்சேவையைப் பெறலாம்.

Tourists Fuel Pass முறைமை அறிமுகப்படுத்துவதற்கு டயலொக் நிறுவனத்துடன் இணைந்து MilleniumIT ESP நிறுவனம், தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles