‘சோற்றில் உப்பு அதிகம்’ – மனைவியை கொன்ற கணவன்! இந்தியாவில் பயங்கரம்!!

சோற்றில் உப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பஹண்ட்ரா கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் நிலீஷ் ஷஹ் (46).

இந்நிலையில், கணவன் நிலீஷுக்கு நிர்மலா நேற்று காலை உணவு பரிமாறியுள்ளார். சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை நிர்மலா பரிமாறியுள்ளார். நிலீஷ் உணவை சாப்பிடும்போது அதில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது.

உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் நிலீஷ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை நிலீஷ் சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நிலீஷ் நெரித்துள்ளார். இதனால், மூச்சுவிடமுடியாமல் நிர்மலா துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு நிலீஷ் தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சோற்றில் உணவு சற்று அதிகமாக இருந்ததால் மனைவியை துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles