புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.பர்ஸான் மீண்டும் உலக சாதனைக்காக எதிர்வரும் 16 திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.
இந்தியாவின் சென்னை மாநகரில் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச திறந்த கராட்டே சம்பியன்சிப் போட்டியிலும், 19 ஆம் திகதி மதுரையில் நடைபெறவுள்ள சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப் பதற்கான போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூ ரியின் பழைய மாணவரான இவர், மதுரையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உலகின் 26 நாடுகளில் வியாபித்துள்ள சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் ஒழுங்கு செய்துள்ள மேற்படி உலக சாதனை நிகழ்வில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இவர் ஐந்து ஓடுகளை ஒரே நேரத்தில் உடைத்தல், இரண்டு கண் இமைகளா லும் 10 மில்லி மீற்றர் கம்பியை வளைத் தல், இரண்டு கண் துருவங்களாலும் சங்கிலியால் பாரம் தூக்குதல், மூக்கினூ டாக குளிர் பானம் அருந்துதல், பல்லால் தேங்காய் உரித்தல், மூக்கால் வயரை விட்டு அதனை வாய் வழியாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல்,
மூக்கினூ டக 4 அங்குல கத்தரிக்கோலை செலுத் துதல், பல்லில் வைத்து 10 மில்லி மீற்றர் கம்பிகள் இரண்டை வளைத்தல், வயிற்றில் பாரமான கற்களை வைத்து சுத்தியலால் உடைத்தல், உடம்பு பாகங்களால் ஓடுகளை உடைத்தல் , மரப்பலகையில் கையால் ஆணிகளை அடித்து ஏற்றுதல் , மரப்பலகைகளை கைகளால் உடைத்தல், நாணயக் குற்றிகளை இரு கண்களுக்குள் ளும் வைத்து மறைத்தல், பல்லால் 15 கிலோ கிராம் எடையைத் தூக்குதல், பெப்ஸி குளிர்பான அலுமினிய டின்களை கையால் உடைத்தல் போன்ற 16 சாதனைகளை உலக சாதனைக்காக நிலை நாட்டவுள்ளமை குறிப்பிடத்தக் கது.