ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஆரம்ப பொதுக்கூட்டம் அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் இன்று (17) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டவர்களால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை , தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக்கூட்டமும் இன்று ஆரம்பமாகின்றது.
காலி, மாத்தறை மற்றும் தங்காலை நகரங்களில் மூன்று பிரதானக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.










