ஜனாதிபதி தேர்தல் சமரிலிருந்து இறுதி நேரத்தில் சஜித் பின்வாங்கக்கூடும் எனவும், டலஸ் அழகப்பெருமவே வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டபோது தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக சஜித் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கி, கரு ஜயசூரியவை பலிகடாவாக்கினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போதும் அவர் களமிறங்காது டலஸ் அழகப்பெருமவை களமிறக்கி, அவரை பலிகடாவாக்கினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் இணைந்த பின்னர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்கும் முடிவை சஜித் எடுப்பார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார் எனக் கூறுகின்றோம்.
டலஸை களமிறக்கிவே கூட்டணி வைத்துள்ளனர். “ – என்றார்.
