” கடந்த பொதுத்தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். எனவே, ஜனாதிபதி தேர்தலில் நான் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவா….”
இவ்வாறு புன்னகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜீவன் இவ்வாறு வினா தொடுத்தார்.
‘ இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை எடுத்தவன் நான்தான், நான் களமிறங்கவா? ஜனாதிபதி தேர்தல் வருவதால் பலரும் அது தொடர்பில் பல கோணங்களில் கருத்துகளை முன்வைக்கலாம். என்னை பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், சிங்களம் என பிரிவினையுடன் வாழ முடியாது. நாட்டு தலைவர் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என இல்லாமல் இலங்கையர் என்ற உணர்வுடன் வருவதே நல்லது.” எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.










