எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் சுயாதீன வேட்பாளராக பங்கு பெறுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
‘ஜனாதிபதி பதவியை வெல்வதற்காக அல்ல, மலையகத் தமிழ் மக்களுக்காக வெல்ல வேண்டிய பல உரிமைகளை தேசிய தளத்தில் சொல்வதற்காக’ எனும் எண்ணக்கருவை முன்வைத்தே திலகர் போட்டியிடுகின்றார்.
2000 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த காலம் முதல் தன்னை முழுமையான இலக்கிய, சமூக, அரசியல் செயற்பாட்டாளராக ஈடுபடுத்திக் கொண்ட திலகர் 2015-2020 காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.