ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராம் – மைத்திரி மீண்டும் கொக்கரிப்பு!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றேன், எனினும், எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டால் உரிய வகையில் செயற்பட முடியாது. எனது கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில்கூட போட்டியிட்டேன், முதுகெலும்பு இருக்கும்வரை அரசியலில் ஈடுபடுவேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles