ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளது என தெரியவருகின்றது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும், இதற்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் இறுதி முடிவை எடுப்பதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூடவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி ஆதரவளிக்க வேண்டும் என மொட்டு கட்சி எம்.பிக்கள் குழுவொன்று வலியுறுத்திவருகின்றது. ஆனால் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என மற்றுமொரு எம்.பிக்கள் குழு அழுத்தம் கொடுத்துவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 20 இற்கு மேற்பட்ட எம்.பிக்களை உடைத்தெடுக்குமாறு மொட்டு கட்சி வழங்கிய நிபந்தனையை ரணில் விக்கிரமசங்க இன்னும் நிறைவேற்றவில்லை எனவும், ஜுலை முதல் வாரத்துக்குள் இது சாத்தியப்படாவிட்டால் மாற்று முடிவொன்றையே மொட்டு கட்சி எடுக்கவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.