ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழர்களின் நிலைப்பாடு என்ன? புருவத்தை உயர்த்துகிறது டில்லி

வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின்நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார்இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களான சிவஞானம் சிறீ தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன்ஆகியோருக்கும், இந்தியத் தூதுவர்சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்படி கேள்வியைத் தொடுத்தார்.
அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பிலும், அது குறித்து தமிழ் மக்களின்நிலைப்பாடு பற்றியும் இந்தியத் தூதுவர் வினவினார்.

இதன்போது தாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித் தோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்தனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் தமிழ் மக்கள் தொடர்பான உறுதி மொழிகள் குறித்தும் தம்மிடம் இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார் என்றும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles