துருக்கியில் பூகம்பத்தால் உறவினர்களை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட 16 குழந்தைகள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் விமானத்தில் தலைநகர் அங்காராவுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
இதில் இரு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் 14 குழந்தைகள் கஹ்ரமன்ராஸ் மருத்துவமனையில் உறவினர்கள் யாரும் இன்றி இருந்துள்ளன.
இந்தக் குழந்தைகள் குடும்பம் மற்றும் சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் சிறுவர் பராமரிப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
துருக்கி ஜனாதிபதியின் விமானம் மருத்துவக் குழுக்களை அழைத்துச் செல்வது, உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற பூகம்பத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
