ஜி- 7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி! ரஷ்யா கடும் சீற்றம்!!

ஜப்பான் Hiroshima நகரில் நடைபெறும் ஜி – 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கலந்துகொள்வாரென என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

குறித்த மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ‘காணொளி’ ஊடாக உரையாற்றுவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் தற்போது மாநாட்டில் நேரில் பங்கேற்பார் என தெரியவருகின்றது. இதன்படி ஞாயிறன்று அவர் ஜப்பானில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜி – 7 மாநாட்டில் கலந்துரையாடப்படும் விடயங்களில் உக்ரைன் – ரஷ்யா போரும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி – 7 அமைப்பில் உக்ரைன் அங்கம் வகிக்காதபோதும் பார்வையாளராக பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அந்த அடிப்படையிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles