இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு இராஜாங்க அமைச்சரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அமரர். ஆறுமுகன் தொண்மானின் படத்துக்கு மலர்தூவி, சுப்பிரமணியன் சுவாமி அஞ்சலியும் செலுத்தினார்.
நிருபர் – டி.சந்ரு