ஜெனிவா தீர்மானத்தை ஏற்கவே முடியாது – இலங்கை திட்டவட்டம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், வெளியக விசாரணை பொறிமுறையை ஏற்க முடியாது – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அறிவித்தார்.

வெளியக விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு, இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கடந்த முறையைவிட குறைவான வாக்குகளே இலங்கைக்கு ஆதரவாகக் கிட்டும் எனவும், இரு நாடுகளே இலங்கைமீது கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் ஜெனிவாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles