ஜோதிடத்துறையில் விபூஷணம் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்

களுத்துறை, புளத்சிங்கள நகரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகரைப் பிறப்பிடமாகவும் கொண்ட, சாமஸ்ரீ தர்ம ஜோதி, சமாதான நீதவான் சிவா பாஸ்கரராவ் அவர்களுக்கு, இலங்கை மனித நேய சமூக நல அமைப்பினால் “ஜோதிடம்/வாஸ்து வித்யா விபூஷணம், கீர்த்தி ஸ்ரீ தேசபந்து இலங்கை புதல்வன்” என்ற கௌரவ பட்டமும் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

மேற்படி பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அமரபுர ஸ்ரீ சந்தர்ம நிகாயாவின் மஹாநாயகரும், இலங்கை மனித நேய சமூக நல அமைப்பின் பணிப்பாளர் நாயகமுமாகிய, சங்கைக்குரிய பெங்கமுவே நாலக தேரரின் பூரண ஆசிகளோடு, அவ்வமைப்பின் நிருவாக இயக்குநர் பேராசிரியர் ஏ.கே. நிரோஷன் மாதவ தலைமையில் நடைபெற்றது.

இலங்கை வரலாற்றில் தமிழர் ஒருவர் முதல் தடவையாக, ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்ற இரு துறைகளிலும் “விபூஷண பட்டம்” பெறும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமய சமூக ஆர்வலரான இவர் இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். மேலும் கொழும்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆங்கில உயர்நிலை டிப்ளோமா, மற்றும் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பட்டயக் கணக்காளர் மற்றும் பொருளாதாரத் துறை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடம் மற்றும் வாஸ்து துறைகளில் தமது பல்வேறுபட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வரும் இவர் இந்திய வேத ஜோதிட சாஸ்திரங்களை இந்தியா மதுரை ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தலைவர், ஜோதிட மகாகுரு பழனிசாமி தர்மராஜ் சண்முகராஜா அவர்களிடம் முறையாக் கற்றுக் கொண்டவர் என்பதுடன், காவத்தை, ஹவுப்பை, தலுகலையூர் சிவா நாச்சியப்பன், கோகிலா தேவி தம்பதியின் சிரேஷ்ட புதல்வருமாவார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles