டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி-, பெல்மதுளை,- இறக்வான-, குருவிட-, எஹலியகொடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் பாரிய குழிகளில் நீரினை அகற்றுவது மிக அவசியமாகவுள்ளதாக இப்பணிகளில் ஈடுபடுவோர் சுட்டிக் காட்டினர்.

இதற்கு மேலதிகமாக சில பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வு மண்ணை நீர் கொண்டு கழுவுவதற்கும் இயந்திரங்கள் மூலம் நீரைப் பெற வேண்டியுள்ளதால் டீசல் தட்டுப்பாட்டினால் முடியாது உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.இந்நிலைமை காரணமாக இரத்தினபுரியில் பல பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரின் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்காவது டீசலினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles