டோக்கியோ ஒலிம்பிக் – மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.

சிலி நாட்டின் தேக்வாண்டோ வீராங்கனை பெர்னாண்டா அகுயர், செக்குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பாவெல் சிரூசெக், டச்சு ஸ்கேட்போர்டு வீராங்கனை கேண்டி ஜேக்கப்ஸ் ஆகியோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் பெர்னாண்டா அகுயரை தவிர்த்து மற்ற இரு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Paid Ad
Previous articleஹிஷாலினி மரணத்தின் மர்மம் உடன் கண்டறியப்பட வேண்டும்!
Next articleஉலகம் மற்றொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் – WHO எச்சரிக்கை