ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் யோசனை நிராகரிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடைமுறைகளை தடுக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டித்தனர்.

பாராளுமன்றத்தில் வன்முறையை தூண்டிவிட்ட டிரம்பை பதவி நீக்கம் செய்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கின. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். பதவிநீக்கம் செய்வதற்கான 25-வது திருத்தத்தை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். தனது முடிவை பாராளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles