(ராசையா கவிஷான்)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கக்கலை, கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (13) முற்பகல் 9 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 10 பெண் தொழிளாலர்களும் ஒரு கங்காணியும் இலக்காகியுள்ளதோடு 3 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
