தங்களது குடும்பத்துடன் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய ஆர்யா, சயீஷா

ரசிகர்கள் எதிர்ப்பார்க்காமல் நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் ஆர்யா மற்றும் சயீஷா.

சில பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும், ஆனால் இவர்களது விஷயம் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு தான் தெரிய வந்தது. 2019ம் ஆண்டு இவர்களது திருமணம் கோலாகலமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.

2021ம் ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

தனது மகளுக்காக சயீஷா ஒரு இன்ஸ்டா பக்கம் தனியாக திறந்து அதில் தனது மகளின் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

மார்ச் 10, 2019ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. நேற்று 4ம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது, எனவே தங்களது மொத்த குடும்பத்துடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டு கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது

Related Articles

Latest Articles