தந்தையை அடித்து கொன்று உடலுக்கு தீ வைத்த மகன்

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தையில் மகனின் தாக்குதலில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படு காயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகநபர் தந்தையின் உடலுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கர வண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகன்
போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை அண்மையில் தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

28 வயதுடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles