தனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர் விமல் வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச வகிக்கும் கைத்தொழில் அமைச்சு அமைந்துள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது.

 அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.

அத்துடன், அமைச்சர் விமல் வீரவன்சவும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளார்.

Paid Ad
Previous articleமேலும் 40 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டுக்கு….
Next articleஅரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்புக்கு புதிய கூட்டணியில் இனி இடமில்லை! – எஸ்.எம் மரிக்கார்