தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 417 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக கம்பளையிலேயே 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றத்திற்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 47,240 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.










