டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதிக்கு அருகில் உள்ள அஞ்சல் பெட்டிக்குள் குளவி கூடு கட்டியுள்ளது.
அருகில் சிறிய பஸ் தரிப்பிடமொன்றும் காணப்படுகின்றது. தற்போது கடும் வெப்பம் நிலவுவதால், தபால் பெட்டி சூடாகி குளவிக்கூடு கலையும் அச்சுறுத்தல் உள்ளது எனவும், அவ்வீதி ஊடாக செல்வதற்கே அச்சமாக உள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடிதங்களை தபால் பெட்டிக்குள் போட முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே, குளவிக்கூட்டை அகற்றிதருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்