தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலமாக இருக்கும் எனவும் புளொட் கட்சி தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
‘ ஒற்றுமையின் ஊடாக ஏற்படுகின்ற பலத்தைக் கொண்டு தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
” நாங்கள் எல்லோரும் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும். இன்றிருக்கின்ற நிலைமையில் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் தமிழ்த் தேசியத்திதுடன் பயணிக்கின்ற எமது வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தலில் அதற்கு மாறான பயணத்தில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது.” எனவும் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.