தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“யார் என்ன சொன்னாலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் பெரும்பாலான விகிதம் ரணில் விக்கிமசிங்கவுக்கே விழும். அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குரிய 69 லட்சம் வாக்கு வங்கியிலும் பெரும்பாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வரும் என உறுதியாக நம்புகின்றேன்.
இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரம்கூட இன்னும் ஆரம்பமாகவில்லை. அவ்வாறு ஆரம்பிக்கப்படும்போது எமது பலம் தெரியவரும்.” -என்றார்.
