தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் தனித்தனியாக சஜித் பிரேமதாஸவால் இன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகத் தாங்கள் கலந்துகொள்ளமாட்டோம் என்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று மாலை தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பினருக்கும்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலிலும் பொதுக் கட்டமைப்பினர் கலந்துகொள்ளாத போதும் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
