தமிழ் மக்கள் மத்தியில் NPP குறித்து கட்டுக்கதை பரப்படுகிறது!

அனைத்து இன மக்களினதும் இன, மத, மொழி மற்றும் கலாசார உரிமைகளை நாம் ஏற்கின்றோம். நல்லிணக்கமே எமது பிரதான இலக்கு. அப்படி இருந்தும் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் எம்மை பற்றி கட்டுக்கதைகள் பரப்படுகின்றன. இதனை மக்கள் நம்பக்கூடாது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தவறான விம்பம் தோற்றுவிக்கப்படுகின்றது. கடந்தகால திரிவுபடுத்தப்பட்ட கதைகள் சமூகவலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்றன.

அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள சில கட்சிகளுக்கு கொள்கை ரீதியில் எம்முடன் மோத முடியாது. இதனால்தான் கட்டுக்கதைகள் பரப்பட்டுவருகின்றன. எனவே, வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. இன மற்றும் மத ரீதியில் நாம் அநீதிகளை இழக்கமாட்டோம். அனைத்து இன மக்களினதும் இன, மத, மொழி, கலாசார உரிமைகளை ஏற்று மதிக்கின்றோம். இன, மத, மொழி பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவதே எமது இலக்காகும்.

வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள் கட்டுக்கதைகளை பரப்பியே தற்போது அரசியல் நடத்த முற்படுகின்றன. குறிப்பாக வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், நாம் சொல்லாத விடயங்களை பரப்பி, தவறான விம்பத்தை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றனர். இவ்வாறான கதைகளை மக்கள் நம்பக்கூடாது. இப்படியான கதைகளை பரப்புபவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles