லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. உபுல் தரங்க 77 ஓட்டங்களையும், திக்வெல்ல 60 ஓட்டங்களையும், சசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்படி தம்புள்ள அணி ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
குணதிலக்க 78 ஓட்டங்களையும், அஸாம் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். புஷ்பகுமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
67 ஓட்டங்களைப்பெற்ற ஏ.கே. பெரோரா ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.