கதிர்காமத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தலவாக்கலை நகரில் இருந்து 60 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர் ஆறாவது முறையாக புனித பாதையாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
(29) இன்று சனிக்கிழமை காலை தலவாக்கலையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி புனித பாதை யாத்திரையை தலவாக்கலை பிரதேச பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தலைவாக்கலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையில் ஈடுப்பட்ட பக்தர்கள் ஆலய திடலில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயம் வரை தாம் ஏந்தி செல்லும் கந்தன் வேலுக்கு பால் அபிசேகத்துடன் விசேட பூஜைகளை நடத்திய பின் தமது நடை பயணத்தை ஆரம்பித்தனர்.
இவர்கள் தலவாக்கலை நகரில் இருந்து லிந்துலை,நானு ஓயா,நுவரெலியா வழியாக சீத்தா எளிய அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கும் பூஜைகளை நடத்திய பின் வெளிமடை வழியாக கதிர்காமத்திற்கு செல்லவுள்ளனர்.
சிவ ஸ்ரீ மூ.பிரசாந்த் குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம் பெற்றது. குருசாமி ராஜா தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.