தலவாக்கலையில் ஆட்டோ விபத்து! மூவர் படுகாயம்!! 

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவே நேற்றிரவுதலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவரும் மது போதையில் இருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
க.கிசாந்தன்

Related Articles

Latest Articles