தலவாக்கலை நகரில் 4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை

தலவாக்கலை நகரில் 4 கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள மருந்தகம், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம், ஹாட்வெயார் மற்றும் டயர் கடை ஆகியனவே இனந்தெரியோதாரால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஹாட்வெயாரிலுள்ள மூன்று இலட்ச ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

அதேவேளை ஏனைய கடைகளில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles