தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

Paid Ad