தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டெழுவோம் – நாமல்

தவறுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” மக்களைப் பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவையாகின. அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 350 ரூபாவுக்கு மக்களுக்கு உரம் வழங்கினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ, உர இறக்குமதியை நிறுத்தி இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்தாரெனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles