தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துக்கு மூன்று மாதகால விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்லவால் முன்வைக்கப்பட்ட விடுமுறை கோரிக்கைக்கே சபை இவ்வாறு அனுமதியளித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்கும் மூன்று மாதகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.










