உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும்.
உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கயிறு தாண்டும் பயிற்சி.
ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.
ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.
உடல்எடை குறைய
முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
இதயம் வலுவடைய
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை நீக்க
உங்களுடைய மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் உங்களுக்கு உண்மையாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
மனகவலை நீங்க
உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்குகின்றன.
உள் உறுப்புகள் சீராக செயல்பட
உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
ஸ்கிப்பிங் பயிற்சி யாரெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா ?
ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
இதய நோயாளிகள், கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.