திஸர பெரேரா அதிரடி – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிநடை!

திஸர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, 66 ஓட்டங்களால் வெற்றிக்கனியை ருசித்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா அணியினர், 8.3 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். எனினும், அணித் தலைவர் திஸர பெரேரா அதிரடி காட்டினார்.

7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்களாக 44 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 219 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களையே பெற்றது. ஆட்ட நாயகனாக திஸர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

Paid Ad