பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை − தியகம பகுதியில் இன்று”(26) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது, அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதையடுத்து, பொலிஸாரின் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸார் உத்தியோகத்தர்கள் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான நபர் ஷன்சைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
