தென்கொரிய பாணியிலான பேச்சு வழக்குகள், அந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாடு எதுவும் வடகொரிய மக்களிடம் மருந்துக்கும் தொற்றக்கூடாது. அவ்வாறு மீறி யாராவது அடுத்த நாட்டு வாசனையோடு ஏதாவது செய்தால் மரண் தண்டனைதான் பரிசாகக்கிடைக்கும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜொங் இளைய தலைமுறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட கொரியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது. மொழி உள்ளது. வழக்காறுகள் உள்ளன. அடுத்த தலைமுறையினர் அதைத்தான் பின்பற்றவேண்டும். மூத்தவர்களும் இதுவிடயத்தில் கவனமாக இருக்கவேண்டும். வீதிகளுக்கு பெயர் வைப்பது உட்பட எந்த நடவடிக்கைகளிலும் தென்கொரிய சாயல் இருக்கக்கூடாது.
கலாச்சார ஊடுருவல்தான் உலகிய மிகப்பெரிய எதிரி. அதனை இலகுவாக இந்த நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டேன் என்று எச்சரித்திருக்கிறார் கிம் ஜொங்.
தென்கொரிய இசை, எழுத்து, திரைப்படங்கள், பின்னுக்கு நீளமாகக் குடுமி வளர்ப்பது போன்றவை தொடர்பில் மிகக்கவனமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் கிம் ஜொங்