இலங்கை கொள்வனவு செய்த 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின் மூலம் அதிகாலை 2.15 அளவில் இலங்கையை வந்தடைந்தன.
இதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிசீல்ட், சினோபாம் , ஸ்புட்னிக் பை ஆகிய தடுப்பூசிகளே இலங்கையில் தற்போது ஏற்றப்பட்டுவருகின்றன. முதன்முறையாக பைசர் தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, எந்த தரப்பினருக்கு இதனை ஏற்றுவது என்பது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.










