” ஏப்ரல் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. “
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
” மேற்படி தகவல் திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது.
ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.
தேசிய அல்லது எந்தவொரு அரசிலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை. ” எனவும் மனோ குறிப்பிட்டார்.
