தேயிலை உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினையால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உற்பத்திகளுக்கு தேவையான, உகந்த உரத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.










