தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மூலம் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (21.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
01. தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்குதல்
கடந்த காலப்பகுதியில் உரத்தின் விலை அதிகரிப்பால் மற்றும் இரசாயன உரத்தடை போன்ற காரணிகளால் தேயிலைச் செய்கையில் உரப்பாவனை குறைதல் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் பயிர் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது.
அதற்கமைய அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மூலம் 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000 இற்கு மானிய விலைக்கு தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.