எதிர்வரும் மே முதலாம் திகதியன்று சர்வதேச தொழிலாளர் தின கூட்டத்தையும், பேரணியையும் தேர்தல் பிரச்சார கூட்டமாக பிரதான அரசியல் கட்சிகள் பயன்படுத்தவுள்ளன.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மே 3 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார போர் முடிவுக்கு வரும்.
வழமையாக இறுதி பிரசாரக் கூட்டத்தை பிரதான கட்சிகள் பிரமாண்டமாக நடத்தவது வழமை. கட்சி தலைமை உட்பட கட்சியின் பிரதான பேச்சாளர்கள் பங்கேற்பார்கள்.
இம்முறை தேர்தலுக்கு முன்னர் மே தினம் வருவதால் அதனை பிரதான பிரச்சார கூட்டமாக கட்சிகள் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
அதேவேளை, தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறும். அவ்வாறான நிகழ்வுகளும் இம்முறை தேர்தல் பிரசாரமாக மாறும் நிலை காணப்படுகின்றது.
……….