தேவர்மகன் 2-ம் பாகத்தில் விக்ரம்

தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும், அப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுக்காக கதை ஒன்றை எழுதி வருவதாக கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையைத் தான் மகேஷ் நாராயணனுக்காக கமல் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Paid Ad
Previous articleகொரோனாவால் மூன்றரை வயது சிறுமி பலி – பலாங்கொடையில் சோகம்
Next articleஆப்கான்- பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர் ஒத்திவைப்பு