‘தோட்டத்தில் மூடப்பட்ட வாசிகசாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை’

பதுளை மாநகரிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில், நமுனுகுல மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்பிரிங்வெளி மேமலைத் தோட்டம்.
இங்கு கற்றுயர்ந்தவர்கள் பலர். இப்பகுதியில் தான் பெருந்தோட்டப்பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற மலையகத்தின் முதலாவது பாடசாலையாகிய பதுளை –
ஸ்பிரிங்வெளி தமிழ் மகா வித்தியாலயம் எனும் பிரபல பாடசாலையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இத்தோட்ட ஊரெங்கும் காணப்பட்ட படிப்பகங்கள் ஓய்வுநேரத்தை பயன்மிக்கதாக கழிப்பதற்கு துணையாக இருந்துள்ளதென இங்குள்ள மூத்த தலைமுறையினர் குறிப்பிடுகின்றனர்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேமலைத் தோட்டத்தில் தோற்றம்பெற்ற அண்ணா படிப்பகம் இங்குள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர், யுவதிகள், வளர்ந்தோர், முதியோர் என அனைவரும் ஒன்றுகூடி நல்ல பல நூல்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ள பேருதவியாக இருந்துள்ளது. இருப்பினும் நாளடைவில் முறையான பராமரிப்பின்மை காரணமாக அண்ணா படிப்பகம் மூடப்பட்டு தோட்டத்தின் இதர தேவைக்காக இக்கட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனால் இன்றைய கால இளைஞர், யுவதிகள் தமக்கிருந்த நூலகப்பயனை அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர்.இதன்காரணமாக மேமலை தோட்டத்தில் பயன்பாடில்லாமல் மூடப்பட்டிருந்த கட்டிடத்தை புனரமைத்து புதிய நூலகமாக மாற்றும் பணிகளை இத்தோட்ட இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் நல்லெண்ண செயற்பாட்டுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்பத்தோடு புதிய நூலகம் பொலிவு பெற சமூக ஆர்வலகர்களின் உதவிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். உதவிகளை வழங்கும் ஆர்வலர்கள் தொடர்புகொண்டு

( தங்கவேல் தேவகுமார் – 0767595363 ) உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles